தயாரிப்பாளர்கள் தோற்ககூடாது: சசிகுமார்
சசிகுமார் நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் பிரம்மன். படத்துக்கான புரமோசன்களை தொடங்கிவிட்டார். இந்தப் படத்தை ஒரு கன்னட தயாரிப்பாளரும், ஒரு மலையாள தயாரிப்பாளரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இதுபற்றி சசிகுமார் கூறியதாவது: என்னை நம்பி வந்தவர்கள் யாரும் நஷ்டப்படக்கூடாது என்று நினைக்கிறவன் நான். பிரம்மன் படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் பக்கத்து மாநிலத்திலிருந்து என்னை நம்பி வந்திருக்கிறார்கள். அவர்கள் தோற்ககூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். பொதுவாகவே தயாரிப்பாளர்கள் தோற்ககூடாது. ஒரு நடிகரோ, இயக்குனரோ தோற்றால் அவர்களுக்கு உழைப்பு மட்டுமே நஷ்டம் அடுத்த படத்தில் எழுந்து வந்துவிடலாம்.
ஒரு தயாரிப்பாளர் தோற்றல் உழைப்பு, பணம் எல்லாமே நஷ்டம்.
எப்போதுமே ஒரு படத்தை முடித்த பிறகுதான் அடுத்த படத்தை பற்றி திட்டமிடுவேன். இயக்குனர் சாக்ரடீஸ் பிரம்மன் கதையை என்னிடம் பலமுறை சொல்ல முயற்சித்தார். அப்போது நான் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்தால் அவரிடம் எனது முடிவை சொல்ல முடியவில்லை. அந்த படங்கள் முடிந்தவுடன் சாக்ரட்டீசுக்கு சான்ஸ் கொடுத்தேன். இப்போது பிரம்மன் பிரமாதமாக வந்திருக்கிறது. பழைய சசிகுமாரை இதில் பார்க்க முடியாது. சில புது விஷயங்களை இதில் கையாண்டிருக்கிறேன். அது ரசிகர்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன். என்றார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment