தமிழ்நாட்டுக்கு வருகிறார் அமெரிக்க கேப்டன்

No comments
ஹாலிவுட்டின் அடுத்த எதிர்பார்ப்பு, 'கேப்டன் அமெரிக்கா-தி விண்டர் சோல்ஜர்'. உலக புகழ்பெற்ற மார்வெல் காமிக்ஸ் புத்தக கதை தொடர்ச்சியாக படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் வரும் படம் இது. முதல் பாகத்தில் நியூயார்க் நகரை பேரழிவிலிருந்து காப்பாற்றிய பிறகு வாஷிங்டனில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் ஸ்டீவ் ரோகேர்ஸ். அப்போது அவரது நண்பர் ஒருவருக்கு ஒரு ஆபத்து வருகிறது. அவரைக் காப்பாற்றச் செல்லும்போதுதான் இன்னொரு பேரழிவு ஏற்பட போவதை அறிகிறார். 
அதிலிருந்து மக்களை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. அன்டோனி ரோசோ, ஜோ ரோசோ இணைந்து இயக்கி உள்ளனர். சாரிஸ் ஈவன், பிராங்க கிரில்லோ, சப்ஸ்டெயன் ஸ்டான் நடித்துள்ளனர். 
 வருகிற ஏப்ரல் 4ந் தேதி உலகம் முழுவதும் ரிலீசாகிறது. அன்றைய தினமே இந்தியாவிலும் ரிலீசாகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழியிலும் டப் செய்யப்பட்டு ரிலீசாகிறது. தமிழில் எதற்கும் அஞ்சாதவன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

No comments :

Post a Comment