28ந் தேதி 13 படங்கள் ரிலீஸ்!

No comments
இந்த ஆண்டின் அதிகபட்ச எண்ணிக்கையாக வருகிற 28ந் தேதி வெள்ளிக்கிழமை 13 படங்கள் ரிலீசாகிறது. ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமை மட்டும் பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் ரிலீசாக வேண்டும், மற்ற வெள்ளிக்கிழமைகளில் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாக வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் புதிய முடிவு ஒன்றை அறிவித்துள்ளது. டப்பிங் படங்கள் இந்த வரைமுறைக்குள் வராது. கடந்த ஆண்டு தணிக்கை செய்யப்பட்ட சுமார் 200 படங்கள் தியேட்டர் கிடைக்காமல் ரிலீசாகவில்லை. இந்த புதிய கட்டுப்பாட்டால் அந்த படங்கள் ரிலீசுக்கு ரெடியாகிக் கொண்டிருக்கின்றன. 
அறிவிப்பு வெளியான முதல் வெள்ளிக்கிழமையே 13 படங்கள் ரிலீசாவது திரையுலகிற்கு சின்ன அதிர்ச்சிதான். இந்த படங்களில் வல்லினம், ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் மட்டுமே மீடியம் பட்ஜெட் படங்கள். அதைத்தவிர பனிவிழும் மலர்வனம், அமரா, தெகிடி, அங்குசம், காதல் சொல்ல ஆசை வங்கங்கரை ஆகியவை சிறு பட்ஜெட் படம். 
வெற்றி மாறன் (மலையாளம்), நான் ஸ்டாப், பறக்கும் கல்லரை மனிதன், ஆக்ஷன் கிட்ஸ் (ஆங்கிலம்) கரன்சி ராஜா (தெலுங்கு) ஆகிய படங்களும் ரிலீசாகிறது. தமிழ்நாட்டில் சுமார் 1200 தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் ரிலீஸ் படங்களை திரையிடும் தியேட்டர்கள் சுமார் 800 இதில் வல்லினம் மட்டும் 400 தியேட்டர்களில் ரிலீசாகிறது. இதுபோக மீதமுள்ள 400 தியேட்டர்களைத்தான் மற்ற படங்கள் திரையிடப்படுகிறது.

No comments :

Post a Comment