தென்னிந்திய திரையுலக முன்னோடிகளின் சிலை - முதல்வர் ஜெ., திறந்து வைத்தார்

No comments
தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு பாடுபட்ட 7 பேரின் உருவச்சிலையை முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள் பலர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் சுப்ரமணியம்பிள்ளை, டி.ஆர்.பந்தலு, எல்.வி.பிரசாத், ராமானுஜம், டி.வி.எஸ்.ராஜூ, நாகிரெட்டி, கே.சுப்ரமணியம் ஆகிய 7 பேர். இவர்களை கவுரவிக்கும் வகையில், இவர்கள் 7பேரின் திருஉருவ சிலை இன்று திறந்து வைக்கப்பட்டது.
 சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையில் உள்ள வளாகத்தில் இந்த சிலை திறப்பு விழா நடந்தது. இதனை தமிழக முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.
 இந்த நிகழ்ச்சியில் திரையுலகை சார்ந்த முன்னோடிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுடன் மேற்கண்ட 7 பேரின் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

No comments :

Post a Comment