தமிழ் தெரியாது என்பதால் காஜலை நிராகரிக்கும் கோடம்பாக்கம்!
சினிமா உலகைப்பொறுத்தவரை பெரிய பட்ஜெட் படங்களை 100 நாட்களையும் தாண்டி படப்பிடிப்பு நடத்துவார்கள். ஆனால், பட்ஜெட் படங்களென்றால் அதிகபட்சம் 40 முதல் 60 நாட்களுக்குள் முடித்து விடுவார்கள். இப்படி விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்த படத்தில் நடிப்பவர்கள் அனுபவசாலிகளாக இருப்பதோடு, தமிழ் தெரிந்தவர்களாகவும இருக்க வேண்டும்.
ஒருவேளை தமிழ் தெரியாத நடிகைகளாக இருந்தால், அவர்களுக்கு வசனம் சொல்லிக்கொடுப்பதிலேயே பாதி நேரம் கழிந்து விடும். இந்த பிரச்னை காஜல்அகர்வாலிடம் இருப்பதினால்தான் அவரை புக் பண்ண படாதிபதிகள் தயங்குகிறார்களாம்.
அதேசமயம், நயன்தாரா, அமலாபால் போன்ற நடிகைகளுக்கு தமிழ் நன்றாக தெரியும் என்பதால், அதிக சம்பளம் கொடுத்தாலும் படப்பிடிப்பு சீக்கிரமே முடிந்து விடும். இதனால் படப்பிடிப்பு செலவு மிச்சமாகிவிடும் என்று கணக்குப்பார்க்கிறார்களாம்.
இது கதிர்வேலன் காதல் படத்தை அடுத்து, உதயநிதி நடிக்கும் நண்பேன்டா படத்தில் முதலில் கமிட்டாகியிருந்த காஜலை, பின்னர் கழட்டி விட்டதும் இந்த பிரச்னைக்காகத்தானாம். இதையடுத்து, தன்னை கோடம்பாக்கம் நிராகரிப்பதின் காரணத்தை தெரிந்து கொண்ட காஜல், அடுத்து தமிழ்நாட்டுக்குள் வரும்போது, தனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு தமிழ் வார்த்தைகளை கடித்து துப்பியாவது, தனக்கும் தமிழ் தெரியும் என்பதை நிரூபிக்க முடிவு செய்திருக்கிறாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment