பிரிந்தோம், இணைந்தோம்: லிஸி சொல்கிறார்
பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷனும், லிஸியும் பிரிந்து வாழ்கிறார்கள். விரைவிலேயே இருவரும் விவாகரத்து செய்ய இருக்கிறார்கள் என்ற செய்தி வெளியானது. அதனை இருவரும் மறுக்காமல் இருந்தார்கள். பிரியதர்ஷன் நடத்தி வரும் சில நிறுவனங்களின் நிர்வாக பொறுப்பு லிஸியிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றில் சில பெரும் நஷ்டங்களை சந்திக்க லிஸியின் கவனக்குறைவே காரணம் என்றும் அதானல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்ததாக கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து பிரியதர்ஷனுக்கு நெருக்கமான சில நண்பர்கள்களும், லிஸிக்கு நெருக்கமான சுஹாசினி, பூர்ணிமா பாக்யராஜ், ரோகினி போன்றவர்களும் இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளனர். இதனால் பிரிந்தவர்கள் மீண்டும் இணைந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து லிஸி கூறியிருப்பதாவது: எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது உண்மைதான். இப்போது சேர்ந்து விட்டோம்.
கம்பெனி தொடர்பாக எழுந்த சில பிரச்னைகள்தான் எங்களுக்குள் பிரிவை ஏற்படுத்தியது. ஈகோ எங்களை ஆட்டிப் படைத்துதும் பிரிவுக்கு ஒரு காரணம். எல்லாவற்றையும் மறந்து இப்போது சேர்ந்து விட்டோம். சந்தோஷமாக இருக்கிறோம். எங்கள் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி. என்று கூறியிருக்கிறார் லிஸி.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment