ஐதராபாத் பறக்கும் விஜய்-முருகதாஸ்!

No comments
ஜில்லா படத்திற்கு பிறகு முருகதாஸ்-விஜய் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான். இப்படத்தில் அனிருத் இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பை கொல்கத்தாவிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சென்னையிலும் நடத்தி முடித்திருக்கிறார்கள். இந்நிலையில் படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் தொடங்கவிருக்கிறது. 
அங்கு ராஜமுந்திரியில் உள்ள சிறை போன்று செட் அமைக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் டோட்டா ராய் செளத்ரி சிறையில் இருந்து தப்பித்து செல்வது போன்றும், அவரை பிடிக்க விஜய் நடத்தும் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன. 
சுமார் 30 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் என படக்குழுவினர் கூறுகின்றனர். முதலில் இந்த ஜெயில் காட்சிகளை ராஜமுந்திரியில் உள்ள நிஜ சிறைச்சாலையிலேயே படமாக்க முருகதாஸ் முடிவு செய்திருந்தார். ஆனால் தெலுங்கானா பிரச்சனையால் படப்பிடிப்புக்குரிய நிலைமை சாதகமாக இல்லாததால், ராமோஜிராவி பிலிம் சிட்டிக்கு மாற்றப்பட்டது. 
சென்னையில் விஜய் சமந்தா ஆடிய நடனக்காட்சிகளை போட்டு பார்த்த முருகதாஸுகு மிகவும் திருப்தியாக இருந்ததாகவும், அதே உற்சாகத்தில் ஐதராபாத்திற்கு படப்பிடிப்புக்கு கிளம்புவதாகவும் கூறப்படுகிறது. படக்குழுவினர் அனைவரும் ஐதராபாத்தில் தயாராக உள்ளனர். விஜய்-சமந்தா, முதன் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் இந்தப் படத்தில் எதிர்நீச்சல் புகழ் சதீஷ் நகைச்சுவைக்குப் பொறுப்பேற்றிருக்கிறார். ஐங்கரன் ஃபிலிம்ஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து பெரும் பொருட்செலவில் இந்தப் படத்தை தயாரிக்கின்றன. 
ஏற்கெனவே விஜய் நடித்த, ‘ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்திருப்பதாலும், இப்படம் நல்ல வெற்றியை பெற்றதாலும் அந்த சென்டிமென்ட் தொடர்கிறது என்கிறார்கள்!

No comments :

Post a Comment