ஜல்லிக்கட்டு பற்றியறிய 300 புத்தகங்களுக்கு மேல் படித்த இயக்குனர்!
ஜோ புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக ஜெ.ஜூலியன் பிரகாஷ் தயாரித்து இயக்கும் படம் “இளமி”.
இதில் முன்னணி கதாநாயகன்,கதாநாயகி நடிக்க இருக்கிறார்கள். அதற்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 18 ஆம் நூற்றாண்டை மையப் படுத்தி கதை உருவாக்கப்பட்டுள்ளது. தமிழனின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுதான் கதை களம்.
300 வருடங்களுக்கு முன்பு நடந்த கதை என்பதால் அதற்கான இடங்களை தேர்வு செய்வதற்குள் படாத பாடு பட்டுவிட்டேன்.
தார் ரோடு, செல்போன் டவர், மின்சார, டெலிபோன் ஒயர் இல்லாத பகுதியை தேடி பிடிக்க கஷ்டப்பட்டு விட்டேன்.
ஸ்ரீகாந்த் தேவா அந்த கால கட்டத்துக்கேற்ப இசையமைக்க சிரமப்பட்டு விட்டார்.
ஜல்லிக்கட்டு பற்றிய முழு விவரங்களையும் தெரிந்துகொள்ள 300 புத்தகங்களுக்கு மேல் படித்து விட்டேன் என்கிறார் ஜூலியன் பிரகாஷ்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment