குடிப்பது மாதிரி நடிக்க வேண்டாம்: அஜீத் – விஜய்க்கு தயாரிப்பாளர் வேண்டுகோள்

No comments
அஜித் – விஜய் இருவரும் இனி குடிப்பது மாதிரி நடிக்க வேண்டாம் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கிருப்பாத்தி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக கே.சண்முகம் தயாரிக்கும் படம் “வீரன்முத்துராக்கு” இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் ஏற்கனவே எஸ்.ஏ.சந்திரசேகரின் வெளுத்துக்கட்டு படத்தில் கதாநாயகனாக நடித்தவர். கதாநாயகியாக லியாஸ்ரீ நடிக்கிறார்.மற்றும் ஷண்முகராஜன்,ஆடுகளம் நரேன்,நமோ நாராயணன், சேரன்ராஜ், விகாஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். 
 இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அபோது பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், சமீபத்திய அஜித், விஜய் படங்களில் மது குடிப்பது மாதிரி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால, நம்ம தல ,தளபதியே குடிக்கிற மாதிரி நடிக்கிறாங்க, நாம் குடித்தால் என்ன தப்பு என்று அவர்கள் உங்களை பின்பற்ற ஆரம்பித்தால் என்ன ஆகும். அடுத்த தலைமுறை அழிந்து போக நீங்கள் காரணமாகி விடாதீர்கள். 
அதே மாதிரி இயக்குனர்கள் இனி குடிப்பது மாதிரியான காட்சிகளை தவிருங்கள். அடுத்தவங்களை அழித்துத் தான் பணம் சம்பாதிக்க வேண்டுமா? யோசியுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார். விழாவில் பட்டியல்சேகர், பி.எல்.தேனப்பன், ஜி.கே,ரம்மி பாலகிருஷ்ணன், எல்வின்பாசர், லியாஸ்ரீ டைகர் ராஜசேகர், இசையமைப்பாளர் எஸ்.வி.ஜி,தயாரிப்பாளர் கே.சண்முகம், பிரேம்நசீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
 விஜய் புகைபிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதில்லை என்று உறுதியளித்துவிட்டார். ஆனால் தலைவா படத்தில் அவர் குடித்துவிட்டு நடனமாடுவதுபோன்ற பாடல் இடம்பெற்றிருந்தது. அஜித் நடித்து அண்மையில் வெளியான வீரம் படத்தில்கூட அவர் மது அருந்துவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

No comments :

Post a Comment