டாஸ்மாக் பிராண்டுகளுக்கு தணிக்கை குழு போட்ட தடா!

No comments
புதுமுங்கள் இணைந்து தயாரிக்கும் படம் என் நெஞ்சைத் தொட்டாயே. ரவிகுமார், பவித்ரா ஹீரோ ஹீரோயின்களாக நடித்துள்ளனர். பி.கே.அன்பு செல்வன் இயக்குவதோடு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அன்பு செல்வன் டாஸ்மாக் பாரில் பாடி ஆடுவதுபோன்ற ஒரு காட்சி வருகிறது. அந்த பாடலின் வரிகள் இப்படி துவங்கும்... ஓல்டு மங்கும், ஓட்காவும் உடம்புக்கு நல்லதுங்குறான் சிக்னேச்சர்சும், சீசர்சும் சிந்தனைக்கு நல்லதுங்குறான் ஜானக்ஷாவும், நெப்போலியனும் நினைப்புக்கு நல்லதுங்குறான்... இப்படி பாடல் வரிகள் டாஸ்மாக் பிராண்டுகளின் புகழைப் பாடுகிறது. 
ஜீவன் மயில் என்பவர் எழுதியிருப்பதற்கு, நாகா இசை அமைத்துள்ளார். படம் சென்சாருக்கு சென்றபோது பாட்டை கேட்டு ஷாக் ஆனார்கள். "அரசாங்கமே விற்றாலும் சரக்கு உடம்புக்கு நல்லதில்லை. 
அதனால பாட்டை வெட்டுங்க" என்று கூறியிருக்கிறார்கள். செலவு செய்து பாட்டை எடுத்து விட்டதால் வரிகளை மாற்றுகிறோம் என்று தயாரிப்பாளர் தரப்பு சொன்னதால் தணிக்கை குழு படத்துக்கு அனுமதி அளித்துள்ளது.

No comments :

Post a Comment