விமானத்தில் குடித்து விட்டு ரகளை: மலையாள கிரிக்கெட் நடிகர்களுக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை

No comments
விமானத்தில் குடித்து விட்டு ரகளை செய்த மலையாள கிரிக்கெட் நடிகர்களுக்கு மலையாள நடிகர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது நடந்து வரும் சிசிஎல் எனப்படும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக மலையாள நடிகர்களை கொண்ட கேரள ஸ்டிரைக்கர்ஸ் அணியினர் கடந்த வாரம் கொச்சியிலிருந்து ஐதராபாத்துக்கு விமானத்தில் புறப்பட்டனர். அவர்களுடன் நடிகை பாவனாவும், மைதிலியும் சென்றிருந்தனர். 
வீரர்களில் பெரும்பாலானேர் மது அருந்தியிருந்தாக கூறப்படுகிறது. விமானத்தில் ஏறியதும் சில நடிகர்கள் விமான பணிப்பெண்களிடம் ரகளை செய்துள்ளனர். இதனால் அவர்கள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்டனர்.
 இந்த சம்பவம் கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து கொச்சியில் நேற்று நடந்த மலையாள நடிகர் சங்கத்தின் (அம்மா) அவசரக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 
மலையாள சினிமாவிற்கு அவமானம் தேடித் தந்த இந்த சம்பவத்திற்கு மூத்த நடிகர்கள் பலரும் கவலை தெரிவித்து பேசினர். கூட்டத்திற்கு பிறகு நடிகர் சங்கத் தலைவர் இன்னோசென்ட் நிருபர்களிடம் கூறியதாவது: "விமானத்தில் கேரள நடிகர்களால் பயணிகளுக்கும், பணிப்பெண்களுக்கும் இடையூறு ஏற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். 
நடிகர்கள் பொது இடங்களில் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறோம். நடந்த சம்பவம் குறித்த கேரள ஸ்டிரைக்கர்ஸ் அணி விளக்கம் அளித்துள்ளது. அதனை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

No comments :

Post a Comment