பழம்பெரும் நடிகை தவிப்பு

No comments
பழம்பெரும் சவுகார் நடிகை, இப்போ சவுகாரா இல்லையாம். பொருளாதார நெருக்கடியில இருக்காராம்... இருக்காராம்... இதை வெளிப்படையாக சொல்லியும் கோலிவுட்காரர்கள் யாரும் காதில் போட்டுக்கலயாம். மம்மி ரோல், பாட்டி ரோல் வந்தால் நடிக்கவும் தயாரா இருந்தவருக்கு ஏமாற்றம்தான் மிச்சமாம். இதை தெரிஞ்சு, அவரை சான்டல்வுட் இண்டஸ்ட்ரி அரவணைச்சிருக்காம். பிரபல ஹீரோவுக்கு மம்மியாக நடிக்க சான்டல்வுட் படத்துல சான்ஸ் கெடச்சிருக்காம். தனது நெருக்கடி கோலிவுட்காரர்களுக்கு எப்போது புரியமோ தெரியலேன்னு நடிகை சலிச்சிக்கறாராம்.
.. சலிச்சிக்கறாராம்... செவன்த் சென்ஸ் ஹீரோ, சொந்த பேனர்ல படங்கள் தயாரிச்சாரு. ஆனா அதுக்கான முழு பொறுப்பையும் தன்னோட உறவுக்காரருக்கு கொடுத்திருந்தாரு. அதனால தான் தயாரிப்பாளருன்னு வெளியில காட்டாம இருந்தாரு. இப்போ நேரடியா அறிவிச்சி, இன்னொரு பேனரை தொடங்கியிருக்காரு. இனிமே உறவுக்காரரோடு படம் பண்ண மாட்டாராம். தன்னோட புது பேனரை வளர்க்க பாடு படப்போறாராம்... பாடு படப்போறாராம்... தாடிக்கார டான்ஸ் இயக்கம் பாலிவுட்ல இருந்தாலும் தம் பங்குக்கு சவுத் ஆக்டருங்கள அறிமுகப்படுத்த தவறலயாம்... தவறலயாம்... இப்படி அறிமுகப்படுத்தற ஹீரோயினுங்க காதல் பார்வை வீசிக்கிட்டே இருந்தா பிரச்னையில்லாம தப்பிக்கலாமாம்...
 தப்பிக்கலாமாம்... கொஞ்சம் பார்வைய திருப்பினா பெண்டு கழல்ற அளவுக்கு டான்ஸ் மூவ்மென்ட் கொடுத்து தவிக்கவிட்றாராம். சமீபத்துல இப்படி ஸ்ரு நடிகை தவிச்சாராம்... தவிச்சாராம்... அடுத்து சாருமியான நடிகை சிக்கி இருக்காராம். இவர் கதி என்ன ஆகுமோன்னு கோடம்பாக்கத்துல பேசிக்கிறாங்களாம்.

No comments :

Post a Comment