விஷயம் ஓபன் உசரம் அதிரடி

No comments
வெங்கட இயக்கம் படத்துல நடிக்கற ஹீரோவ சிரிச்சபடியே கிளிப்பிள்ளபோல ஆட்டுவிக்கறாராம்... ஆட்டுவிக்கறாராம்... இப்படித்தான் தல ஹீரோ படத்த இயக்கனப்ப டாஸ்மாக் சீன் ஒண்ணு வந்துச்சாம். இதுக்கு செட்போட்டு ஷூட் பண்றதுக்கு பதிலா ஒரிஜினல் கடைலய ஷூட்டிங்க வச்சா தத்ரூபமா இருக்கும்னு உசுப்பிவிட்டாராம். சீனுக்கு முக்கியம்னு இயக்கம் சொன்னதால ஹீரோவும் அப்ஜெக்ட் பண்ணாம ஒரிஜனல் டாஸ்மாக் போயி நடிச்சாராம். இந்த விஷயத்த இத்தன நாளுக்குபிறகு இப்பத்தான் இயக்கம் ஓபன் பண்றாராம்... பண்றாராம்... பாலிவுட்ல ஹிட் கொடுத்ததால வாய்ப்புகள் குவியும்னு ஒல்லிபிச்சான் நடிகரு காத்திருந்தாராம்... காத்திருந்தாராம்...
 ஆனா ஒரு வாய்ப்பு கூட வரலையாம். முதல் இந்தி படம் பண்ணின அதே இயக்கம், அடுத்த படத்துலேயும் சான்ஸ் தர்றேன்னு சொல்லிருக்காராம். அந்த வாய்ப்பாவது கிடைக்கணும்னு ஹீரோ தவம் கிடக்கிறாராம்... கிடக்கிறாராம்... இனிஷியல் இயக்கம் நடிச்சு, இயக்குற படம் வில்லஙகமான கதையாம். ரெண்டு இசைகளை பத்திய கதையாம்.
 இதுல ஞான இசை கேரக்டர்ல நடிக்க சொன்னதும் பிரகாச வில்லன் நடிகரு ஜகா வாங்கிட்டாரு. ஞானம் மேல நான் மரியாதை வச்சிருக்கேன். அதை கெடுக்க பாக்காதீங்கன்னு இயக்கம் மேல கோபப்பட்டாராம்... கோபப்பட்டாராம்... கடைசியா உசர நடிகரு அந்த ரோலுக்கு புக் ஆயிட்டாரு. எனக்கு எந்த கேரக்டர்ல நடிக்கவும் பயம் கிடையாது. கொடுக்கிற கேரக்டர்ல நடிக¢கிறதுதான் என்னோட வேலைன்னு உசரம் அதிரடியா சொல்றாராம.

No comments :

Post a Comment