ஆஹா கல்யாணம்: 26 வயதுக்குட்பட்ட இளைஞர்களால் உருவாக்கப்பட்ட படம்: சொல்கிறார் இயக்குனர்

No comments
இந்தியில் வெளியான பேண்ட் பஜா பாரட் படத்தை, தமிழில் ஆஹா கல்யாணம் என்ற பெயரில் ரீமேக் செய்திருக்கிறார்கள். நானி, வாணி கபூர், சிம்ரன் நடித்துள்ளனர். விஷ்ணுவர்த்தன் உதவியாளர் கோகுல கிருஷ்ணன் இயக்கி உள்ளார். பிரபல இந்திப் பட தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. வருகிற 21ந் தேதி படம் ரிலீசாகிறது. இதுபற்றி இயக்குனர் கோகுல கிருஷ்ணன் கூறியிருப்பதாவது: 
இந்தியாவின் மிக சிறந்த காதல் படமான பேண்ட் பஜா பராட் படத்தை தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்ப மாற்றி வழங்கி உள்ளேன் . படத்தின் முதல் பிரதியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் . சக்தியாக நாணியும் , ஸ்ருதியாக வாணியும் கலக்கி இருக்கிறார்கள் . காட்சிக்கு காட்சி திரையில் இவர்களில் இளமை குறும்பு கொப்பளித்து கொண்டே இருக்கும் . எங்களது ஒட்டு மொத குழுவுக்கும் சராசரி வயது 26க்கு மேல் இருக்காது .
 அதனால் மட்டுமே எங்களால் இந்த காதலர் மாதத்தில் காதலர்களை மட்டுமல்ல எல்லோரையும் கவரும் படமாக இப்படம் இருக்கும். புதிய இயக்குனரான நான் வெற்றி பெற்றால் பல்வேறு புதிய இயக்குனர்களுக்கும் வாய்ப்புகள் பெருகும் என்பதால் என் பொறுப்புணர்ச்சியும் அதிகமாகிறது .

No comments :

Post a Comment