ஜீவா படத்திற்கு ஹாலிவுட் சண்டை பயிற்சியாளர்!

No comments
என்றென்றும் காதல் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஜீவா நடித்துக் கொண்டிருக்கும் படம் 'யான்'. இந்த படத்தில் கடல் படத்தின் நாயகி துளசி, ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இது இவர் இயக்கும் முதல் படம். கிட்டதட்ட படத்தின் படப்பிடிப்புகள் 75% முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக ஹாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் கலைஞர் முஸ்தபா டொகி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 இவர், ‘சீரோ டார்க் 30’, ‘தி மம்மி’, ‘பாடி ஆஃப் லைஸ்’ என பல ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர். மேலும் ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது உட்பட பல விருதுகளை வென்றிருக்கிறார். படத்தின் சண்டை காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு இருக்க வேண்டும் என்பதற்காக அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தை ஆர்.எஸ். இன்போடெயின்மெண்ட் தயாரிக்கிறது. ராதாவின் மூத்த மகள் 'கார்த்திகா'வுடன் நடித்த 'கோ' படம் ஜீவாவுக்கு ஒரு திருப்புமுனை படமாக இருந்தது. அதேபோல் ராதாவின் இளையமகள் 'துளசி'யுடன் நடிக்கும் இந்த படமும் பெரும் வெற்றியை அவருக்கு பெற்றுத்தரும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments :

Post a Comment