‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுக்கு மூன்று நாயகிகள்!

No comments
விஸ்வரூபம்-2 படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் ‘உத்தம வில்லன்’. இந்தப்படத்தை கமல்தான் இயக்குவார் என கூறப்பட்டது. ஆனால் கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் தான் இயக்குகிறார். ரமேஷ் அரவிந்த் ஏற்கெனவே கமலை வைத்து ‘சதிலீலாவதி’ படத்தின் ரீமேக்கை கன்னடத்தில் இயக்கி இருக்கிறார். முதன்முறையாக அவர் தமிழில் அறிமுகமாகும் படம் இது. இப்படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணியாற்றி வருகிறார்
. இயக்குனர் லிங்குசாமி தயாரிக்க இருக்கும் இந்தப்படத்தின் வசனங்களை கமலின் ஆஸ்தான வசனகர்த்தாவான கிரேசி மோகன் எழுதுகிறார். படப்பிடிப்பு வரும் பிப்-24ஆம் தேதி பூஜையுடன் துவங்க இருக்கிறது. இந்தப்படத்தில் மூன்று முன்னணி கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக காஜல் அகர்வால், தமன்னா மற்றும் த்ரிஷா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நட்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் படத்தில் இயக்குனர் கே.பாலச்சந்தரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கமல் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து இந்த படத்தில் நடிக்க பாலசந்தர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment