விரல்வித்தக நடிகரின் குடும்பம் மதம் மாறியது உண்மையா? கோலிவுட்டில் மேலும் ஒரு பரபரப்பு!

No comments
யுவன் சங்கர் ராஜா இஸ்லாம் மதத்துக்கு மாறியதுதான் கோலிவுட்டில் தற்போதைய ஹாட் நியூஸ். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு பரபரப்பு செய்தி கிளம்பியுள்ளது. சிம்பு உட்பட டி.ராஜேந்தரின் குடும்பமே கிறிஸ்தவ மதத்துக்கு மாறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மனைவி உஷாவின் விருப்பத்துக்கேற்ப இந்த மத மாற்றம் நிகழ்ந்துள்ளதாம். சிம்பு, குறளரசன், இலக்கியா ஆகியோருக்கு இதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் பெற்றோர் பேச்சுக்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் மதம் மாறிவிட்டார்களாம்
. இதனால்தான் டி ராஜேந்தரின் சொந்தப் பட நிறுவனத்தின் லோகோவில் கூட சிலுவைக் குறியீடு இடம்பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 10ம் தேதி டி.ராஜேந்தரின் மகள் இலக்கியாவிற்கு திருமணம் நடைபெற்றது நினைவிருக்கலாம். இந்த திருமணத்தின் போதுதான் டி.ஆர். குடும்பம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது அம்பலத்துக்கு வந்துவிட்டது. முழுக்க முழுக்க கிறிஸ்தவ முறைப்படிதான் இலக்கியாவின் திருமணம் நடந்தது. டி.ராஜேந்தர் குடும்பம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறி சில வருடங்களாகிவிட்டதாம். இருந்தும், அதனை வெளிக்காட்டாமல் ரகசியமாக வைத்திருந்தனர். இந்நிலையில் தற்போது அது அம்பலமாகியுள்ளது. சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா மதம் மாறியதற்கு ஆதரது தெரிவித்து சிம்பு டுவிட் செய்திருந்தார். நண்பன் என்ற முறையில் யுவனுக்கு ஆதரவாக டுவிட் செய்திருப்பார் என்று அனைவரும் எண்ணி இருந்தனர். ஆனால் இப்போதுதான் அதற்கான காரணம் என்ன என்று பலருக்கு தெரியவந்திருக்கும்.

No comments :

Post a Comment