லட்சத்தீவில் சுற்றித்திரியும் ஸ்வாதி

No comments
மலையாளப் படமொன்றில் லட்சத்தீவில் சுற்றித் திரியும் பெண்ணாக நடிக்கிறார் ஸ்வாதி. இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தொடர்ந்து வடகறி படத்தில் நடித்து வரும் ’சுப்ரமணியபுரம்’ புகழ் ஸ்வாதி, ‘மோசயிலெ குதிரமீனுகள்’ என்ற மலையாள படத்திலும் நடித்து வருகிறார். லட்சத்தீவின் பின்னணியில் அஜித் பிள்ளை இயக்கி வரும் இதில் கதையின் நாயகர்களாக சன்னி வைன், ஆசிஃப் அலி ஆகியோர் நடிக்க, ஸ்வாதி அந்தத் தீவில் சுற்றித்திரியும் பெண்ணாக, வித்தியாசமான மேக்-அப்பில், மாறுபட்ட ஒரு மொழியை பேசி நடிக்கிறார். 
 ஏற்கெனவே ‘ஆமேன்’, ‘நார்த் 24 காதம்’ ஆகிய மலையாள படங்களில் நடித்துள்ள ஸ்வாதி, இந்தப் படமும் தனக்கு மலையாளத்தில் ஒரு வெற்றிப் படமாக அமையும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

No comments :

Post a Comment