விக்ரம் பிரபுவின் ஜோடியாக நஸ்ரியா

No comments
விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேரவிருக்கிறார் நஸ்ரியா நசீம். மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'உஸ்தாத் ஹோட்டல்' படம் தமிழில் 'தலப்பாகட்டி' என்ற பெயரில் ரீ செய்யப்படுகிறது. மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த கேரக்டரில் தமிழில் விக்ரம் பிரபு நடிக்க, நித்யா மேனன் நடித்த கேரக்டருக்கான நடிகை முடிவாகாமல் இருந்தது. லேட்டஸ்ட் தகவலின்படி அந்த கேரக்டரில் நஸ்ரியா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம், உஸ்தாத் ஹோட்டலில் நித்யா மேனனுக்கு சிறிய கேரக்டர் என்பதால், முதலில் அந்த கேரக்டரில் நடிக்க தயக்கம் காட்டினாராம் நஸ்ரியா.
 அதன் பிறகு, ’தலப்பாகட்டி’யை இயக்கும் சத்யசிவா, மலையாளத்தை விட தமிழில் ஹீரோயினுக்கு முக்கியத்தும் இருப்பது மாதிரி ஸ்கிரிப்ட்டை மாற்றி அமைத்திருப்பதாகவும், அதில் ஹீரோயினுக்கு அதிக ஸ்கோப் இருப்பதாகவும் அவருக்கு எடுத்துக் கூறிய பிறகே அவர் நடிக்க ஒப்புக் கொண்டாராம். உஸ்தாத் ஹோட்டல் படம் பிடிக்கப்பட்ட கோழிக்கோடு கடற்கரை பிரதேசங்களில் ’தலப்பாக்கட்டி’யின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கி, தொடர்ந்து கொச்சி, பாண்டிச்சேரி, மதுரை ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது.

No comments :

Post a Comment