அடம்பிடிக்கும் ரித்திக் ரோஷன்

No comments
பாங் பாங் படத்தில் வரும் சண்டை காட்சிகளில் டூப் போடாமல் தானே நடிப்பேன் என்று ரித்திக் ரோஷன் அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார். ரித்திக் ரோஷன்- கத்ரீனா ஹைப் மீண்டும் ஜோடியாக நடிக்கும் படம் ‘பாங் பாங்’. கடந்த ஆண்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடக்கும்போதுதான் ரித்திக் ரோஷனுக்கு தலையில் அடிபட்டது. அதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை எல்லாம் எடுத்துக் கொண்டு, ஓய்வெடுத்த பின்னர் மீண்டும் படப்பிடிப்பினை ஆரம்பித்துள்ளார். 
 இதில் கலந்துகொண்டு நடிக்கும் ரித்திக்கிடம், சண்டை காட்சிகளில் டூப்பை பயன்படுத்தலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் ரித்திக் அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளவில்லையாம், மற்ற காட்சிகளில் நடிப்பது மாதிரி சண்டை காட்சிகளிலும் தானே நடிக்கிறேன் என்று கூறி அவரே நடிக்கிறாராம்.
 இருப்பினும் படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு டூப் போடும் ஆட்கள் தயாராக வைக்கப்பட்டிருப்பார்களாம். ஹாலிவுட் படமான ஸ்பைடர் மேன் 2 படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த ஆன்டி ஆர்ம்ஸ்ட்ராங் தான் பாங் பாங் படத்தில் ஆக்ஷன் காட்சிகளை கவனித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

No comments :

Post a Comment