பாலுமகேந்திரா- ஓர் சகாப்தம்
தமிழ் சினிமாவின் உன்னத படைப்பாளி, ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.
இவரது மரணம் திரையுலகினர் மட்டுமல்லாது ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
தனது திரையுலக பயணத்தை ஒரு ஒளிப்பதிவாளராக 1972ம் ஆண்டு ஆரம்பித்த பாலு மகேந்திரா, 42 ஆண்டுகாலம் பணியாற்றியுள்ளார்.
இந்த காலகட்டத்தில் அவர் பெற்ற விருதுகளும், பாராட்டுகளும் ஏராளம். அவை அனைத்துமே தமிழ் சினிமாவுக்கு மகுடம் சூடுபவையாக அமைந்தன.
மூன்றாம் பிறை, அழியாத கோலங்கள், வீடு, சந்தியா ராகம், மறுபடியும், சதி லீலாவதி என தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத படங்களை இயக்கியவர் பாலு மகேந்திரா.
தனது படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தது மட்டுமன்றி, பல்வேறு இயக்குநர்களின் படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
மகேந்திரன் இயக்கிய முள்ளும் மலரும் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா தான்.
சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான தலைமுறைகள் படம், மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இவரது இயக்கத்தில் உருவான படங்கள்
கோகிலா
அழியாத கோலங்கள்
மூடுபனி
மஞ்சு மூடல் மஞ்சு (மலையாளம்)
ஓலங்கள் (மலையாளம்)
நீரக்ஷ்னா (தெலுங்கு)
சத்மா (ஹிந்தி)
ஊமை குயில்
மூன்றாம் பிறை
நீங்கள் கேட்டவை
உன் கண்ணில் நீர் வழிந்தால்
யாத்ரா
ரெண்டு தொகல திட்ட (தெலுங்கு)
இரட்டை வால் குருவி
வீடு
சந்தியாராகம்
வண்ண வண்ண பூக்கள்
பூந்தேன் அருவி சுவன்னு
சக்ர வியூகம்
மறுபடியும்
சதி லீலாவதி
அவுர் ஏக் ப்ரேம் கஹானி (ஹிந்தி)
ராமன் அப்துல்லா
ஜூலி கணபதி
அது ஒரு கனாக்காலம்
தலைமுறைகள்
தேசிய விருதுகள்
சிறந்த ஒளியமைப்பிற்கான தேசிய விருது
கோகிலா(கன்னடம்) — 1978
மூன்றாம் பிறை(தமிழ்) — 1983
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது
வீடு(தமிழ்) — 1988
சந்தியா ராகம்(தமிழ்) —1990
வண்ண வண்ண பூக்கள்(தமிழ்) —1992
மாநில அரசு விருதுகள்
சிறந்த ஒளியமைப்பிற்கான மாநில அரசு விருது
நெல்லு(1974) — கேரள அரசு
பிரயாணம்(1975) — கேரள அரசு
சிறந்த திரைக்கதைக்கான மாநில அரசு விருது
கோகிலா(1977) — கர்நாடக அரசு
நந்தி விருதுகள்
சிறந்த ஒளியமைப்பிற்கான நந்தி விருது
மனவூரி பண்டவலு(1978)
நிரீக்சனா(1982)
ஃபில்ம்பேர் விருதுகள்
சிறந்த இயக்குனர்
மூன்றாம் பிறை(தமிழ்) —1983
ஒலங்கல்(மலையாளம்) —1983
வீடு(தமிழ்) — 1988
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருதை பாலு மகேந்திரா மூன்று முறை பெற்றுள்ளார் வீடு, சந்தியாராகம், வண்ண வண்ண பூக்கள்.
சிறந்த திரைக்கதைக்கு கோகிலா, அழியாத கோலங்கள் ஆகியவை விருது பெற்றன
. ஜூலி கணபதி சிறந்த படத்தொகுப்புக்கான சாந்தாராம் விருது பெற்றது, இம்மூன்று துறைகளிலும் விருதுபெற்ற ஒரே திரைப்பட நிபுணர் இவர் மட்டும் தான். புகழ் சூட்டும் உதவி இயக்குனர்கள் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பலர் தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற இயக்குநர்களாக உள்ளனர். சேது, நந்தா, பிதாமகன் போன்ற படங்களை இயக்கிய பாலா, பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இவர் தவிர ராம், வெற்றி மாறன், சீமான், சுகா போன்றவர்களும் பாலு மகேந்திராவின் உதவியாளர்கள் தான்.

Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment