பேசிக்கொண்டே இருக்கும் சிம்பு- ஹன்சிகா

No comments
ஹன்சிகாவுடன் திருமணம் குறித்து பேசிக்கொண்டே இருக்கிறேன் என்று கூறியுள்ளார் சிம்பு. வேட்டை மன்னன் படத்தின் மூலம் சிம்புவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே காதல் பூ பூத்தது. இந்த பூவின் வாசனை கோடம்பாக்கம் முழுவதும் பரவியதைத் தொடர்ந்து இருவரும் காதலிக்கிறோம் என்று ஒத்துக்கொண்டனர்.
 ஆனால் இடையில் மீடியாக்கள் வேறு இருவரும் பிரிந்துவிட்டனர் என்ற செய்தியை பரப்பு, நாங்கள் இப்போது வரை காதலிக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக சிம்புவின் பிறந்தநாளன்று கேக் வெட்டி கொண்டாடியது இந்த ஜோடி. இந்நிலையில் சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கும் திருமணம் நடந்து முடிந்திருப்பதால்,

 அடுத்தது சிம்புவின் திருமணம்தான் என்று தற்போது பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரபல பத்திரிகைக்கு பேட்டியளித்த சிம்பு, தனது திருமணம் குறித்து, வேட்டை மன்னன் பட சமயத்தில் நானும் ஹன்சிகாவும் அறிமுகமாகிக் கொண்டோம். ஆனால், அப்போ எதுவும் பெர்சனலாக பேசிக்கொள்ளவில்லை. திடீரென பேச ஆரம்பிச்ச நாங்க, பேசிகிட்டே இருந்தோம். இப்போ வரைக்கும் பேசிக்கிட்டே இருக்கோம். இது எங்கபோய் முடியும்னு எங்களுக்கும் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
  1. x

No comments :

Post a Comment