ஜி.வி.பிரகாஷின் சின்சியாரிட்டி
‘பென்சில்’ படத்திற்காக உடல் மெலிந்துள்ளாராம் ஜி.வி.பிரகாஷ் குமார்.
இசை அமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார்
.
இவரது அடுத்த அவதாரம் நடிகன், ‘பென்சில்’ படத்தின் மூலம் ஹீரோவாகவும் களம் இறங்க இருக்கும் இவர் இந்தப் படத்திற்காக நிறையவே மெனக்கெடுகிறார்.
இயல்பாகவே ஒரு ‘ஸ்மார்ட் பாய்’ ஆக காட்சி அளிப்பவர் ஜி.வி.பிரகாஷ், இப்படியிருக்க
, பென்சில் படத்தின் பள்ளி மாணவன் கதாபாத்திரத்திற்கு மேலும் தன்னை ‘ட்ரிம்’ ஆக்க தினமும் ஜிம், உடற்பயிற்சி என்று உழைத்து தன் உடம்பை செதுக்கி வருகிறார்.
69 கிலோ எடை இருந்த ஜி.வி.பிரகாஷ்குமாரின் தற்போதைய எடை 60 கிலோவாம்.
மணிநாகராஜ் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் நாயகியாக நடிக்கிறார் ‘ஊதா கலரு ரிப்பன்’ ஸ்ரீதிவ்யா.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment