ஓவியாவின் தாராள மனசு

No comments
முத்தக்காட்சியில் தாரளமாக நடிப்பேன் என்று கூறியுள்ளார் ஓவியா. களவாணி, கலகலப்பு படங்களின் மூலம் பிரபலமானவர் ஓவியா. தற்போது புலிவால் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் பிரசன்னாவுடன் முத்த காட்சியில் துணிச்சலாக நடித்துள்ளார்மேலும் படுக்கையறை காட்சிகளிலும் கவர்ச்சி காட்டியுள்ளார். இதுகுறித்து கேட்டபோது, கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியில் நடிக்க தயார். ‘கலகலப்பு’ படத்தில் கவர்ச்சி அவசியம் என்பதால் அதுமாதிரி நடித்தேன். ‘புலிவால்’ படத்தில் முத்த காட்சியில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னபோது மறுக்கவில்லை

. பெரிய நடிகைகள்கூட இப்போது முத்த காட்சிகளில் நடிக்க மறுப்பது இல்லை. மேலும் சினிமாவில் அதிர்ஷ்டம் முக்கியம். நிச்சயம் எனக்கும் ஒரு நாள் அதிர்ஷ்டம் அடிக்கும். மலையாளத்தைவிட தமிழ் படங்களில் நடிக்கவே விருப்பம் உள்ளது. இங்கு சம்பளமும் நிறைய கிடைக்கிறது. ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆட அழைத்தால் சம்மதிப்பேன். ஆனால் பெரிய ஹீரோக்களுடன் மட்டுமே ஆடுவேன் என்று கூறியுள்ளார் ஓவியா.


No comments :

Post a Comment