சிறப்பு தோற்றத்தில் விஜய்

No comments
பெரும்பாலும், விஜய், சிறப்பு தோற்றத்தில் நடிப்பது இல்லை. ஆனால், தன் தந்தை இயக்கிய, பந்தயம், சுக்கிரன் போன்ற படங்களில் மட்டும் நட்புக்காக நடித்திருந்தார். பிரபுதேவா கேட்டதால், இந்தியில் அக் ஷய் குமாரை நாயகனாக வைத்து அவர் இயக்கிய, ரவுடி ரத்தோர் என்ற படத்தில், ஒரு பாடல் காட்சியில் தோன்றி, நடனமாடியிருந்தார் விஜய். இந்நிலையில், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த, துப்பாக்கி படம், ஹாலிடே என்ற பெயரில், தற்போது இந்தியில் ரீ-மேக்காகி வருகிறது.
 இந்த படத்திலும் அக் ஷய் குமார் தான், நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்கும் முருகதாஸ், விஜயை ஒரு கேரக்டரில் நடிக்கும்படி, கேட்டதை அடுத்து, அதற்கு ஓ.கே., சொல்லியிருக்கிறாராம். ஆனால், அவர் எந்த மாதிரி வேடத்தில் நடிக்கிறார் என்பதைசஸ்பென்சாக வைத்துள்ளனர்.

No comments :

Post a Comment