மலையாள சினிமாவை மயக்கிய அஜித்

No comments
அஜித்தின் ‘சால்ட் அன்ட் பெப்பர்’ லுக் ஸ்டைலை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளனராம் மலையாள ஹீரோக்கள். அஜித், சால்ட் அன்ட் பெப்பர் லுக்குடன் அவர் நடித்த மங்காத்தா, ஆரம்பம், வீரம் ஆகிய படங்கள் வெற்றி பெற, அவரின் இந்த ஸ்டைலை இப்போது மலையாள படவுலகின் பல ஹீரோக்களும் ஃபாலோ பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். மம்முட்டி தற்போது நடித்து வரும் கேங்ஸ்டர் படத்தில் அவர் 5 மாறுபட்ட கெட்-அப்களில் நடிக்கிறார். இதில் ஒரு கெட்-அப்பில் முழுக்க முழுக்க நரைத்த தலைமுடி, தாடியுடன் வருகிறார்.
 ஜோஷி இயக்கும் லைலா ஓ லைலா , உன்னி கிருஷ்ணன் இயக்கும் மிஸ்டர் ஃப்ராட் ஆகிய படங்களில் ஹீரோவாக நடிக்கும் மோகன்லால், ‘தல’யை போன்று சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில்தான் நடிக்கிறார். மலையாளத்தின் இன்னொரு முன்னணி ஹீரோ ப்ருத்திவிராஜ். இவர் தற்போது நடித்து வரும் செவன்த் டே. இப்படத்தில் 42 வயதுடைய பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் இவருக்கும் நரைத்த முடி தானாம். மொத்தத்தில் மலையாள சினிமாவை மயக்கி வருகிறது அஜித்தின் சால்ட் அன்ட் பெப்பர் லுக் ஸ்டைல்.

No comments :

Post a Comment