சம்பளத்தை தடாலடியாக உயர்த்தினார் ஓவியா!

No comments
களவாணி படத்தில் அறிமுகமான மலையாள நடிகையான ஹெலன் என்ற ஓவியாவுக்கு அதன்பிறகு கலகலப்பு ஓரளவு கைகொடுத்தது. தொடர்ந்து மூடர் கூடம், மதயானைக்கூட்டம், புலிவால் என சமீபத்தில் அவர் நடித்த பல படங்கள் திரைக்கு வந்தன. ஆனபோதும், எந்த படமும் வெற்றி பெறவில்லை. அதனால், மார்க்கெட்டில் பரபரப்பு இல்லாமலேயே இருக்கிறார் ஓவியா. ஆனபோதும், புலிவால் படத்தில் முத்தக்காட்சி, படுக்கையறை காட்சி என புகுந்து விளையாடியதால் ஓவியாவின் பக்கம் சில கமர்சியல் படாதிபதிகள் திரும்பியுள்ளனர். அதனால் அயிட்டம் நடிகை ரேஞ்சுக்கு ஓவியாவை தோலுரிக்கும் பொருட்டு கதைகளுடன் முற்றுகையிட்டு வருகின்றனர். 
ஆனால் அந்த கதைகளை கேட்டு கதைக்கு தேவையான அளவு கிளாமர் காட்ட நான் ரெடி. ஆனால், அப்படி நடிக்க வேண்டுமென்றால் எனக்கு 20 லட்சமாவது தரவேண்டும். அப்படி சம்பள விசயத்தில் நீங்கள் தாராளம் காட்டினால், கவர்ச்சி விசயத்தில் நானும் தாராளம் காட்டுவேன் என்கிறார். முதலில் ஓவியாவிற்கு இது அதிகம்தான் என்று சொன்ன படாதிபதிகள் அடுத்த கிரேடில் நடிகைகளை நாடியபோது, அவர்கள் 30, 40 என்று லட்சங்களை சொல்லியடித்ததால், எகிறி குதித்து மறுபடியும் ஓவியாவின் பாசறைக்குள் வந்துள்ளனர். 
அதனால், அதிகமாக கூலி கேட்டு விட்டோமோ என்று பீல் பண்ணிக்கொண்டிருந்த ஓவியா, அவர்கள் மீண்டும் தன்னிடமே தஞ்சமடைந்திருப்பதால் சில படங்களில் 20 லட்சம் என சம்பளத்தை வாங்கி விட்டு, அடுத்த வருடத்திற்கு புக்காகும் படங்களுக்கான சம்பளத்தை இன்னும் தடாலடியாக உயர்த்தவும் திட்டம் வைத்திருக்கிறாராம்.

No comments :

Post a Comment