ஹன்சிகா வேப்பிலை டான்ஸ் : பெண்களை கவர திட்டம்
கொலு பொம்மை போன்று, கோலிவுட்டுக்குள் நுழைந்த ஹன்சிகா, பின், கவர்ச்சி பொம்மையானார். அதையடுத்து, மிக எளிதாக, நம்பர் ஒன் நடிகையாகிவிட்டார்.
ஆனாலும், நயன்தாராவின் அதிரடி பிரவேசம் காரணமாக, பல வாய்ப்புகளை இழந்தார் ஹன்சிகா. அதனால், தன் திறமையை வெளிப்படுத்தும் கதைகளாக, தேடிப்பிடித்து நடித்து வருகிறார். அதிலும், பெண்களை கவரும் வகையிலான வேடங்களில் நடிப்பதிலும், ஆர்வமாக உள்ளார்.
ராம நாராயணன் படங்களில், வேப்பிலை டான்ஸ் பெண்கள் மத்தியில்,அதிகமாக ரீச்சானதை, ஹன்சிகாவிடம், யாரோ, போட்டு கொடுத்து விட்டனர்.
இதையடுத்து, புதிதாக நடித்து வரும் ஒரு படத்தில், தனக்கு வேப்பிலை டான்ஸ் வேண்டும் என்று, கேட்டு வாங்கி, நடித்து வருகிறாராம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment