ஒரே நேரத்தில் பல சீரியல்களில் நடிப்பது சிரமமாக இல்லை: மகாலட்சுமி
வாணிராணி, பிள்ளை நிலா, ஆபீஸ், ரெங்கவிலாஸ், மாமியார் தேவை என ஒரே நேரத்தில்5 சீரியல்களில் நடிக்கும் ஒரே நடிகை மகாலட்சுமி. இப்போது இன்னொரு புதிய சீரியலிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஒரு நேரத்தில் பல சீரியல்களில் நடிப்பது பற்றி மகாலட்சுமி கூறியிருப்பதாவது:
ஒவ்வொரு சீரியலிலும் என்ன கேரக்டரில் நடிக்கிறோம் என்பதை மனசுல ஆழமா வச்சிருக்கேன். அந்தந்த ஸ்பாட்டுக்கு போனால் அந்த கேரக்டரா மாறிடுறேன். இதனால எந்த குழப்பமும் வர்றதில்லை.
ஒரே நேரத்துல இத்தனை சீரியலான்னு பிரண்ட்சுங்களே கேட்குறாங்க.
ஆச்சர்யமாவும் கேட்கிறாங்க. அனுதாபமாகவும் கேக்குறாங்க. எப்படிக் கேட்டாலும் எனக்கு சந்தோஷமாகத்தான் இருக்கு.
நான் நடிக்கிற கேரக்டருக்கு ஒரு மதிப்பு இருக்கணும்னு நினைக்கிறேன். சின்ன திருப்பம் தனியாக ஒரு டிராக்குன்னு அந்த கேரக்டர் அமைஞ்சுதுன்னா அது மக்கள் மனசுல நிக்கும். அரசி சீரியலில் தொடங்கி இப்போ வாணி ராணி வரைக்கும் ராதிகா மேடம் சீரியல்கள்ல தொடர்ந்து நடிக்கிறதுக்கு காரணமே அவுங்க எனக்கு அப்படியான கேரக்டர்களை தந்துடுவாங்க.
அதோட அவுங்களோட ஒர்க் பண்றப்போ நமக்கு ஒரு எனர்ஜி கிடைக்கும், நிறைய தன்னம்பிக்கை கிடைக்கும், எவ்வளவு பெரிய பிரச்னை வந்தாலும் ஈசியா சமாளிச்சுடுவாங்க. நிறைய சீரியல்கள்ல நடிக்கிறதாத பேமிலியோட அதிகம் இருக்க முடியல.
பிரண்ட்சுங்கள நிறைய மிஸ் பண்ணறேன். மற்றபடி நான் சந்தோஷமா இருக்கேன். என்கிறார் மகாலட்சுமி.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment