சூசன் பிரிவு... காதலர் தினத்தை மகன்களோடுசெலவிட்ட ஹிரித்திக் ரோஷன்

No comments
மும்பை: மனைவி சூசனை பிரிந்ததால், கடந்த வெள்ளியன்று வந்த காதலர் தினத்தை தனது இரு மகன்களோடு செலவிட்டுள்ளார் நடிகர் ஹிரித்திக் ரோஷன். கடந்த 17 வருடங்களாக பிப்ரவரி 14ம் தேதியை தனது காதல் மனைவி சூசனுக்கென ஒதுக்கி வைத்திருந்தார் இந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன். ஆனால், கடந்தாண்டு திடீரென ஹிரித்திக்-சூசன் மண வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டது.
 அதனைத் தொடர்ந்து தற்போது அவர்கள் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வெள்ளியன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, மணாலியில் இருந்த ஹிரித்திக் மும்பை பறந்து வந்தார். மும்பையில் தனது இருமகன்களான ஹிரீகான் மற்றும் ஹிரீதான் ஆகியோரோடு காதலர் தினத்தை செலவழித்தாராம் ஹிரித்திக்.

No comments :

Post a Comment