ஆபாச பாடல் வீடியோ வழக்கு... கைதாகிறார் அனிருத்?

No comments
சென்னை: ஆபாச பாடல் வீடியோ உருவாக்கியதற்காக பிரபல இசையமைப்பாளர் அனிருத் கைதாகும் சூழல் உருவாகியுள்ளது. 3 படத்தில் இடம்பெற்ற கொல வெறி பாடலுக்காக உலகப் புகழ் பெற்றவர் அனிருத். பெற்ற புகழுக்கு இணையாக சர்ச்சைகளிலும் அடிக்கடி சிக்கி வந்தார். ஆபாச பாடல் வீடியோ வழக்கு... கைதாகிறார் அனிருத்? நடிகை ஆண்ட்ரியாவை அவர் லிப் டு லிப் முத்தமிட்ட படங்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஒப்புக் கொண்ட படங்களை முடித்துத் தராததால் தயாரிப்பாளர் சங்க பஞ்சாயத்திலும் மாட்டினார். இப்போது யூடியூப்பில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இசை ஆல்பம் ஒன்றை வெளியிட்ட்ருப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த இசை ஆல்பத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. 
 இது தொடர்பாக அனிருத் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, அனிருத் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். இது தொடர்பாக அனிருத்தின் தந்தை அளித்த விளக்கத்தை போலீசார் ஏற்கவில்லை. எனவே அனிருத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர் போலீசார். விரைவில் அனிருத்திடம், நேரில் விசாரணை நடத்துகிறார்கள். குற்றம், நிரூபிக்கப்பட்டால் அனிருத் கைதாவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் மைத்துனர் மகன்தான் இந்த அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment