சூப்பர் ஸ்டாருடன் போட்டியில் இறங்கும் 4 மெகா பட்ஜெட் படங்கள்
பொங்கலுக்கே வெளிவர வேண்டிய படம் ரஜினியின் கோச்சடையான். ஆனால் அப்போது ஏற்பட்ட தியேட்டர் பிரச்னை காரணமாக, இப்போது ஏப்ரல் 11-ந்தேதியில் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். இதனால் அதே நாளில் வெளியாவதாக இருந்த சில சின்ன பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டன. இதனால் உலகமெங்கிலும் 6 ஆயிரம் தியேட்டர்களில் கோச்சடையானை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
ஆனால், இந்த நேரத்தில் கமலின் விஸ்வரூபம்-2வும் ஏப்ரலில் திரைக்கு வரப்போவதாக கூறப்படுகிறது. தற்போது டப்பிங் பணிகள் நடந்து கொண்டிருப்பதால், அது சாத்தியப்படும் என்கிறார்கள்.
அதனால், கடந்த பொங்கல் தினத்தில் அஜீத்தும், விஜய்யும் மோதிக்கொண்டதுபோல் இந்த முறை ரஜினியும், கமலும் மோதிக்கொள்ளும் சூழ்நிலைகள் உருவாகியிருக்கிறது.
இதற்கிடையே, விக்ரமின் ஐ, தனுஷின் வேலையில்லா பட்டதாரி, விஷாலின் நான் சிகப்பு மனிதன் ஆகிய படங்களும் ஏப்ரலில் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஒரே நேரத்தில் இத்தனை பிரபலங்களின் படங்களும் வெளியானால் தியேட்டர் பிரச்னை பூதாகரமாக வெடித்து விடும் என்பதால், பேச்சுவார்த்தை மூலம் சில படங்களின் ரிலீசை தள்ளி வைக்கும் முயற்சிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment