அஜீத்துடன் நடிக்க கெளதம்மேனனை துரத்தும் சமந்தா!
கெளதம்மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களில் நடித்தவர் சமந்தா. தற்போது சூர்யாவின் அஞ்சான், விஜய்யின் புதிய படம் ஆகியவற்றில் டூயட் பாடிக்கொண்டிருப்பவருக்கு அடுத்து இதே வேகத்தில் அஜீத்துடனும் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்ற ஆசை மேலோங்கியுள்ளதாம்.
தற்போது தமிழில் விஜய், சூர்யாவுடன் நடிப்பதால், அஜீத்துடன் நடிப்பதற்கான வாய்ப்பு தானாக தேடிவரும் என்று காத்திருந்தாராம் சமந்தா.
ஆனால், கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கவிருக்கும் படத்திற்கு அனுஷ்காவை முதலில் ஓ.கே செய்த கெளதம், அவர் முன்பை விட முதிர்ச்சியாக இருப்பதாக சொல்லி இப்போது வேறு நடிகை தேடும் படலத்தில் இறங்கியிருக்கிறார்.
அதனால் . இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்வோம் என்று கெளதம்மேனனை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டு வருகிறாராம் சமந்தா. ஆனால், அவர் தன்னை இந்த நேரத்தில் எதற்காக சந்திப்பார் என்பதை யூகித்துக்கொண்ட கெளதம்மேனன், பிடிகொடுக்காமல் எஸ்கேப்பாகி வருகிறாராம். இருப்பினும் விடாமல் துரத்தும் சமந்தா, அவரது செல்போனுக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டேயிருக்கிறாராம்.
இதுபற்றி விசாரிக்கையில், நீதானே என் பொன்வசந்தம் தோல்வியடைந்ததால், அந்த செண்டிமென்ட் கருத்தில் கொண்டு, சமந்தாவை சந்திக்க மறுக்கும் கெளதம், வேறு ஒரு நடிகையை அப்படத்துக்கு புக் பண்ணிய பிறகுதான் சமந்தாவை சந்திக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக அவரது வட்டாரத்தகவல் தெரிவிக்கிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment