குத்துப்பாட்டு நடிகராகும் இசையமைப்பாளர் அனிருத்!
எம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களெல்லாம், படங்களுக்கு இசையமைப்பதோடு சரி. படத்தில் காலை நுழைப்பது, கையை நுழைப்பது என்ற வேலைகளில் எல்லாம் ஈடுபடமாட்டார்கள். ஆனால், இன்றைக்கு நிலைமையே தலைகீழாகி விட்டது. இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் கதாநாயகர்களாகி விட்டனர்.
அவர்களைத் தொடர்ந்து கொலவெறி புகழ் அனிருத், பாடல் காட்சிகளில் தோன்றி அதிரடி ஆட்டம் போட்டு வருகிறார். ஏற்கனவே தான் இசையமைத்த வணக்கம் சென்னை படத்தில் ஒரு பாடலுக்கு கலக்கல் ஆட்டம் போட்ட அனிருத், வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ், சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு பாடலில் நடனமாடியுள்ளார்.
அதன்பிறகு இப்போது மான்கராத்தே படத்திலும் ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிரடி ஆட்டம் போட்டிருக்கிறாராம். குறிப்பாக, சிவகார்த்திகேயன் மாதிரியே ஹேர் ஸ்டைல் மறறும் கலர்புல்லான காஸ்டியூம் அணிந்து இந்த பாடலில் நடனமாடியுள்ள அனிருத், தனது மூவ்மெண்டும் பேசப்பட வேண்டும் என்பதற்காக, முன்கூட்டியே நடன மாஸ்டரை அழைத்து முறையாக பயிற்சி எடுத்தாராம்.
அதனால், ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனுடன் ஆடும்போது அவருக்கு இணையாக தானும் ரவுண்டு கட்டினாராம் அனிருத்.
இப்படி தொடர்ச்சியாக குத்துப்பாடல்களில் கவனத்தை திருப்பியிருக்கும் அனிருத், அடுத்தபடியாக, விஜய், அஜீத்தின் புதிய படங்களுக்கும இசையமைப்பவர், அந்த படங்களிலும் தலா ஒரு பாடலில் தான் நடனமாடி விட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட இயக்குனர்களிடம் இப்போதே காது கடித்து வருகிறார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment