கெட்டப்பை போன்று குரலையும் மாற்றிப்பேசும் சீயான் விக்ரம்!

No comments
சீயான் விக்ரம் என்றாலே வித்தியாசம் என்பார்கள். அந்த அளவுக்கு ஒரே மாதிரியாக இல்லாமல் படத்துக்குப்படம் மாறுபட்ட கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பார். சேது, பிதாமகன், காசி, அந்நியன், தெய்வத்திருமகள் என்று அவரது வித்தியாசத்திற்கு உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அதைத் தொடர்ந்து இப்போது ஷங்கரின் ஐ படத்தில் இந்த படங்கள் அனைத்தையும் மிஞ்சும் வகையில், பல மாறுபட்ட தோற்றங்களில் நடித்திருக்கிறார் விக்ரம். 
 இப்படி அவர் நடித்துள்ள ஒவ்வொரு கெட்டப்புக்காகவும் மாதக்கணக்கில் பயிற்சி எடுத்து நடித்தவர், கடைசியாக நடித்த ஒல்லிகுச்சி வேடத்துக்காகத்தான் ரொம்ப சிரத்தை எடுத்திருக்கிறார். 
முகமும், உடம்பும் மெலிந்து போய் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு உருமாற்றிக்கொண்டு நடித்துள்ளார். ஒருவழியாக படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது டப்பிங் பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. 
இதில் ஒவ்வொரு கெட்டப்புக்காகவும் ஒவ்வொரு விதமாக தனது குரலை மாற்றி பேசுகிறாராம் விக்ரம். சினிமாவில் ஹீரோவாக வெற்றி பெறுவதற்கு முன்பு பல நடிகர்களுக்கு டப்பிங் பேசி வந்தவர் விக்ரம் என்பதால், அவரிடம் மிமிக்ரி கலைஞர்களைப்போன்று ஒன்றுக்கு மேற்பட்ட பல குரல்களில் பேசும் திறன் இருப்பதால், தனது குரலில் பலரூபங்களை காண்பித்து வருகிறாராம் சீயான்.

No comments :

Post a Comment