ரம்யா நம்பீசனின் ரசிகராம் டைரக்டர் வெங்கட்பிரபு!
டைரக்டர் வெங்கட்பிரபு தனது சகாக்களான ஜெய், வைபவ், சிவா, தம்பி பிரேம்ஜி உள்ளிட்ட நடிகர்களுடன் எந்த விழாக்களுக்கு வந்தாலும், களை கட்டும். அந்த அளவுக்கு அங்கு வந்திருப்பவர்களைப்பற்றி ஏதாவது சொல்லி கலாய்த்துக்கொண்டேயிருப்பார்கள். அதைப்பார்த்து கே.எஸ்.ரவிக்குமாரே ஒரு மேடையில், வெங்கட்பிரபு யூனிட்டைப்பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும். காரணம், அவர்கள் எதைப்பற்றியும் கவலைபப்டாமல் எப்போதும் ஜாலியாகவே இருப்பார்கள் என்று குறிப்பிட்டார்.
அப்படிப்பட்ட வெங்கட்பிரபு, சமீபத்தில் ஒரு சினிமா விழாவுக்கும் தனது சகாக்கள் படை சூழ வந்தவர், அப்படத்தின் நாயகியான ரம்யா நம்பீசனின் பெயரை மேடையில் பேசுபவர்கள் குறிப்பிட்டாலே கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
இதனால் எதிரே இருக்கும் ரசிகர்களை விட, மேடையில் தனக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பார்கள் போலிருக்கே என்று பெருமையாக அமர்ந்திருந்தார் ரம்யா நம்பீசன். ஆனால், அதைப்பார்த்து அவர்கள் ரம்யாவை கலாய்க்கிறார்கள் என்றுதான் மற்றவர்கள் நினைத்துக்கொண்டார்கள்.
ஆனால், வெங்கட்பிரபு பேசுகையில், ரம்யாவை குறிப்பிட்டு, நான் சாதாரணமாக எல்லா நடிகைகளையம் ரசிக்க மாட்டேன்.
ஆனால், ரம்யாநம்பீசனின் பியூட்டியும், பர்பாமென்சும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் நடித்த குள்ளநரிக்கூட்டம் படம் பார்த்ததில் இருந்தே நான் அவரது ரசிகனாகி விட்டேன். இப்போதும் அவர் நடித்த படங்களென்றால அவருக்காகவே அந்த படங்களை ஆர்வமாக பார்த்து ரசித்து வருகிறேன் என்று பேசினார்.
இதை கேட்டுக்கொண்டிருந்த ரம்யா நம்பீசன், ஒரு பிரபல டைரக்டரே தனது பர்பாமென்ஸ் பற்றிமேடையில் பெருமையாக சொன்னதோடு, அவரை தனது ரசிகர் என்றும் சொன்னதால், சொல்ல முடியாத சந்தோசத்தில் திளைத்துப்போயிருந்தார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment