ஆடியோ விழாவில் தூரதூரமாய் விஜய்சேதுபதியும் – ஐஸ்வர்யாவும்…!!
‘வேதநாயகி பிலிம்ஸ்’ ஏ.ஆர்.முருகன், சி.ஜவகர் பழனியப்பன் வழங்க, புதுமுகங்கள் நடிக்க, அறிமுக இயக்குநர் மணிகண்ட குமார்.ஜி. இயக்கத்தில், தன்வி இசையமைப்பில் உருவாகி இருக்கும் ‘அலை அலையாய்’ திரைப்படத்தின் ஆடியோ சி.டி. வெளியீட்டு விழா சென்னை, வடபழனி, ஆர்.கே.வி. ஸ்டுடியோ திரையரங்கில் மூத்த சினிமாக்காரர்,
வி.சி.குகநாதன், தயாரிப்பு சங்க நிர்வாகிகள் கேயார், கே.ஈ.ஞானவேல்ராஜா, டி.சிவா, நடிகர் விஜய் சேதுபதி, இசையமைப்பாளர் டி.இமான், ‘ராட்டினம்’ இயக்குநர் தங்கசாமி, நடிகைகள் ஐஸ்வர்யா, சுஜா வருணி உள்ளிட்ட திரையுலக வி.வி.ஐ.பி.க்களுடன் மேற்பட்ட திரைப்பட குழுவினரும் கலந்து கொள்ள விமரிசையாக நடந்தேறியது.
இவ்விழாவில் சமீபகாலமாக (‘ரம்மி’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ படங்களுக்கு பின்) இணைந்து கிசுகிசுக்கப்படும் விஜய்சேதுபதியும், ஐஸ்வர்யாவும் ஜோடியாக கலந்து கொண்டும் மேடையில் ஜோடி சேர்ந்து உட்காரமல், சுமார் ஏழெட்டு சீட் இடைவெளி விட்டு இந்த மூலையில் ஒருத்தரும், அந்த மூலையில் ஒருத்தரும் அமர்ந்திருந்தனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment