டுவிட்டரில் கலக்கும் சினேகா!

No comments
நடிகை சினேகா டுவிட்டர் இணையதளத்தில் இணைந்துள்ளார். முன்பெல்லாம் சினிமா பிரபலங்கள் தங்களின் ரசிகர்கள் சந்திப்பது என்பது அரிதான ஒன்று. ஆனால் இன்றைக்கு அப்படி கிடையாது. அவர்களை டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் எளிதாக சந்திக்க முடிகிறது. இதன் மூலம் அவர்கள், தங்களைப் பற்றிய தகவல்களை எளிதாக ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்கின்றனர். ரஜினி, கமல், அஜித் உள்பட சில முன்னணி திரை பிரபலங்களை தவிர ஏ.ஆர்.ரஹ்மான் முதல் விஜய், டாப்ஸி, ஹன்சிகா, தனுஷ், ஜீவா என பல திரை உலக பிரபலங்கள் டுவிட்டரில் அக்கவுண்ட் வைத்துள்ளனர்.
 இந்நிலையில், கடந்த 2012-ம் வருடம் நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்துகொண்ட சினேகா தற்போது டுவிட்டர் இணையதளத்தில் இணைந்துள்ளார். நடிகர் பிரசன்னா தனது டுவிட்டர் பக்கத்தில் இதை உறுதி செய்து டுவிட் செய்துள்ளார். அந்த டுவிட்டில், ´சினேகா டுவிட்டரில் இணைந்துள்ளார். இந்த உலகம் எவ்வளவு இனிமையானது என்பதை அவருக்கு உணர்த்துங்கள் நண்பர்களே’ என்று சினேகாவின் டுவிட்டர் @actress_Sneha முகவரியோடு குறிப்பிட்டு இருக்கிறார்.
 சினேகாவின் டுவிட்டர் தளத்தில், இதுவரை நான்காயிரத்திற்கும் அதிகமானோர் அவரை பின் தொடர்ந்து வருகிறார்கள். இது குறித்து சினேகா, "கிடைத்த வரவேற்பிற்கு நன்றி. மிக குறுகிய நேரத்தில் இவ்வளவு பேர் எனது தளத்தினை பின் தொடர்வார்கள் என்று நினைக்கவில்லை. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தங்கள் அன்பிற்கு நன்றி " என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments :

Post a Comment