தயங்கிய நஸ்ரியா! எடுத்துக் கூறிய இயக்குனர்
விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேரவிருக்கிறார் நஸ்ரியா நசீம்.
கடந்த வருடம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம் ‘உஸ்தாத் ஹோட்டல்’. இந்தப்படத்தில் ஒரு தாத்தாவுக்கும் பேரனுக்குமான நட்பையும் அதற்கிடையே அழகான ஒரு காதலையும் வைத்து சூப்பர்ஹிட் படமாக இயக்கியிருந்தார் அன்வர் ரஷீத். இதனை தமிழில் ‘தலப்பாகட்டி’ என்ற பெயரில் ரீ செய்ய இருக்கிறார்கள்.
மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த கேரக்டரில் தமிழில் விக்ரம் பிரபு நடிக்க, நித்யா மேனன் நடித்த கேரக்டருக்கான நடிகை முடிவாகாமல் இருந்தது.
லேட்டஸ்ட் தகவலின்படி அந்த கேரக்டரில் நஸ்ரியா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம். உஸ்தாத் ஹோட்டலில் நித்யா மேனனுக்கு சிறிய கேரக்டர் என்பதால், முதலில் அந்த கேரக்டரில் நடிக்க தயக்கம் காட்டினாராம் நஸ்ரியா.
அதன் பிறகு, ’தலப்பாகட்டி’யை இயக்கும் சத்யசிவா, மலையாளத்தை விட தமிழில் ஹீரோயினுக்கு முக்கியத்தும் இருப்பது மாதிரி ஸ்கிரிப்ட்டை மாற்றி அமைத்திருப்பதாகவும், அதில் ஹீரோயினுக்கு அதிக ஸ்கோப் இருப்பதாகவும் என எடுத்துக் கூறிய பிறகே நஸ்ரியா நடிக்க ஒப்புக் கொண்டாராம்.
தமிழில் தாத்தாவாக ராஜ்கிரணும் பேரனாக விக்ரம்பிரபுவும் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர, சூரி, சார்லி, தம்பிராமையா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மார்ச்-31ல் கோழிக்கோட்டில் ஆரம்பிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு, கேரளா, பாண்டிச்சேரி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் நடக்க இருக்கிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment