மைதானத்தில் சுருண்டு விழுந்த விஷால்: கண்ணீர் சிந்திய வரலட்சுமி!
திரைக்குப் பின்னால் ஹீரோவும், ஹீரோயினும் நிஜமாக காதலிப்பது ஒன்றும் புதிதில்லை.
ஆனால் அதை அவர்கள் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. யாராவது கேட்டால் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்களாகத்தான் இருக்கிறோம் என்று சொல்வார்கள். இதற்கு விஷாலும் வரலட்சுமியும் ஒன்றும் விதிவிலக்கல்ல. இருவரும் காதலித்து வருகிறார்கள் என்பது ஊரறிந்த விஷயம். ஆனால் அவர்கள் இதைப் பற்றி இதுவரை வாய் திறந்ததே கிடையாது. இருப்பினும் அதைனையும் தாண்டி சில ஆதாரங்கள் விஷால்-வரலட்சுமி காதலை உறுதிபடுத்தியுள்ளன.
கடந்த வாரம் கர்நாடகா புல்டோசர் அணியுடன் சென்னை ரைனோஸ் அணி விளையாடிய போது விஷால் ஒரு விக்கெட்டை வீழ்த்தியபோது வரலட்சுமி ஐ லவ் யூ என்று கத்திக்கொண்டே மைதானத்தில் ஓடினார். அதில் உச்சமாக நேற்று முன்தினம் ராஞ்சியில் நடைபெற்ற சிசிஎல் கிரிக்கெட் போட்டியில் விஷால் வீசிய ஓவர் ஒன்றில் எதிர் அணியின் பேட்ஸ் மேன் ஓங்கி அடித்தார். உடனே அதை விஷால் பிடிக்க முயன்ற போது, அந்த பந்து வயிற்றை பதம் பார்த்தது. இதில் சுருண்டு விழுந்தார் விஷால். இதை பார்த்துக் கொண்டிருந்த நடிகை வரலட்சுமி பதறிப் போனார். அவர், கண்களில் இருந்து கண்ணீர் துளிகள் எட்டிப் பார்த்தது.
இவைதவிர, விஷால் இப்போது நடித்து வரும் நான் சிகப்பு மனிதன் ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட அவ்வப்போது வரலட்சுமி வந்து போகிறார் என்று சொல்கிறார்கள்.
இப்படி விஷால்- வரலட்சுமியின் நெருங்கிய காதலுக்கு பல ஆதாரங்கள் அடுத்தடுத்து வெளி வருவதால் சீக்கிரமே இருவரும் திருமண பந்தந்துக்குள் நுழைந்து விடுவார்கள் என்பது மட்டும் நிச்சயமாம். பல முன்னணி ஹீரோக்களும் முதலில் தங்கள் காதலை மறுத்து பிறகு அவர்களாகவே ஒருநாள் தங்கள் திருமண தேதியை மீடியாக்கள் முன்னிலையில் அறிவிப்பது வாடிக்கையான ஒன்று.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment