மே மாதத்தில் விஸ்வரூபம்- 2

No comments
உலகநாயகனின் விஸ்வரூபம் 2 மே மாதம் வெளியாகவுள்ளது. விஸ்வரூபம் படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை அடைந்ததையடுத்து தற்போது அடுத்த பிரம்மாண்டத்திற்கு விஸ்வரூபம் -2 படம் தயாராகி வெளியாக உள்ளது. இந்த படம் முதலில் 2013இல் வெளியாகும் என்று கூறப்பட்டு, பின்னர் ஜனவரி 2014இல் தள்ளி வைக்கப்பட்டது. எனினும் இப்படத்தின் இறுதி கட்டம் முடிவடைந்துள்ளதால், தயாரிப்பாளர்கள் இந்த படத்தின் வெளியீட்டை அறிவிக்க தயாராகியுள்ளனர். 
 முதலில் விஸ்வரூபம் படம் ஏப்ரல் 11 தேதி வெளியிட திட்டமிட்ட நிலையில் கோச்சடையான் வெளியீடு காரணமாக மே 2ம் திகதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. 
 மேலும் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நெருங்கிய நண்பர்கள் என்பதால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட விரும்பமாட்டார்கள். இதனால் தான் விஸ்வரூபம் பட வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எதுவாகிலும் இப்படம் வெளிவந்தால் ஊரே திருவிழா கோலம் தான்.

No comments :

Post a Comment