தலைவாவை பின்னுக்குத் தள்ளிய கோச்சடையான் டிரைலர்!

No comments
ரஜினி நடித்து நீண்ட நாட்களுக்கு பிறகு திரைக்கு வரப்போகும் படம் கோச்சடையான். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே படம் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ரஜினி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ‘எந்திரன்’. இந்தப் படம் வெளியாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் ரஜினியை திரையில் காண ரசிகரகள் ஆவலாய் காத்திருக்கின்றனர். இந்நிலையில் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில் ’கோச்சடையான்’ டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது- இந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. டிரைலரை கிட்டதட்ட 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்திருக்கின்றனர்.
 முன்னதாக விஜய் நடித்த ‘தலைவா’ படத்தின் டிரைலர்தான் அதிகம் பேர் பார்த்தவர்கள் வரிசையில் இருந்தது. இந்த டிரைலரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருந்தினர். இப்போது விஜய்யின் சாதனையை கிட்டத்தட்ட டபுள் மடங்கு வரவேற்பு பெற்று ரஜினியின் ‘கோச்சடையான்’ முறியடித்துள்ளது. இந்தப் படம் உலக முழுவதும் ஏப்ரல் 11ம் தேதி திரைக்கு வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் தேறிய பின்னர் நடித்து வெளிவர உள்ள படம்; தனது இரண்டாவது மகள் சௌந்தர்யா இயக்குனராக அவதரித்துள்ள படம்,
 ரஜினிகாந்த் நடித்துள்ள முதல் 3டி படம்; இந்தியாவிலேயே முதன்முதலாக மோஷன் கேப்சர்ஸ் தொழில்நுட்பத்தில் தயாராகியுள்ள முதல் 3டி படம்; ரஜினி அப்பா-மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வெளிவர இருக்கும் படம் என ஏகப்பட்ட சிறப்பு அம்சங்களுடன் உருவாகியுள்ள படம் கோச்சடையான். இப்படத்தில் ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெரப், நாசர், ஷோபனா, ருக்மணி என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடந்து வருகிறது.

No comments :

Post a Comment