ராகுல்காந்திக்கு ஆதரவாக ஆபாச ‘போஸ்’ கொடுத்த நடிகை!

No comments
தேர்தல் என்ற பெயரில் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு கவர்ச்சி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நரேந்திரமோடிக்கு ஆதரவாக பாலிவுட் நடிகை மேக்னா படேல் அரை குறை ஆடையுடன், ஆபாச போஸ் கொடுத்து பிரசாரம் செய்து சமீபத்தில்தான் பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர், ராகுல் காந்திக்கு, மக்களவைத் தேர்தலில் ஆதரவளிக்குமாறு மேக்னா 
படேலுக்கு போட்டியாக மும்பையைச் சேர்ந்த நடிகை, தனிஷா சிங் ஆபாச, “போஸ்’ கொடுத்துள்ளார். கழுத்துக்கு கீழ் முதல் இடுப்புக்கு மேல்வரை, ராகுல் காந்தியின் படத்தை வைத்து, உடல் பாகங்களை மறைத்தவாறு, நடிகை தனிஷா சிங், ஆபாச போஸ் கொடுக்கும் படங்கள், வலைதளங்களில் வெளியாகியுள்ளன. மற்றொரு படத்தில், தனிஷா, ராகுலின் படத்தை கட்டித் தழுவியவாறு உள்ளார். இந்தப் படங்களைப் பார்த்த, காங்கிரஸ் தலைவர்கள், “கட்சிக்கு சம்பந்தம் இல்லாத நடிகை தனிஷா, தனக்கு விளம்பரம் தேடிக் கொள்வதற்காக, இது போல் செய்துள்ளார்’ என, தெரிவித்துள்ளனர்.

No comments :

Post a Comment