காதலும் பிடிக்கும்; காமெடியும் பிடிக்கும் - சொல்கிறார் நந்திதா!!

No comments
''அட்டகத்தி'' படத்தில் அறிமுகமாகி, 'எதிர்நீச்சல்' , 'இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா' என்று வரிசையாக வெற்றி படங்களில் நடித்து வருபவர் நந்திதா, தற்போது சத்தம் இல்லாமல் 'முண்டாசு பட்டி' , 'அஞ்சலா' என்று 2 படங்களில் நடித்து முடித்துள்ளார். அவரை நாம் தொடர்பு கொண்டு பேசியபோது, அவர் கூறியதாவது, பொதுவாக நான் நடிக்கும் படங்களை பார்க்கும் ரசிகர்களுக்கு புதிதாக ஒரு பீல் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படி வரும் கதைகளாய் பார்த்து, தேடித்தேடி நடிக்கிறேன். 
பாலகுமாரா படத்தை அடுத்து புது இயக்குநர் ராம் இயக்கத்தில், ''முண்டாசுப்பட்டி'' படத்தில் விஷ்ணுவுடன் நடித்தேன். இந்தப்படத்தில் மேக்கப் இல்லாமல் பள்ளி செல்லும் பெண்ணாக நடிக்கிறேன். படத்தில் கோவை தமிழ் பேசி நடித்திருக்கிறேன். 
 அடுத்து ''அஞ்சலா'' படம். சுந்தரபாண்டியன் படத்தின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனிடம் உதவி இயக்குநராக இருந்த சரவணன் இப்படத்தை இயக்குகிறார். 
இப்படத்தில் விமல் ஹீரோ. அஞ்சலா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். இந்த இரண்டு படங்கள் முடித்ததும் மார்ச் மாதத்திற்கு மேல் கவிதாலயா தயாரிப்பில் பூபதி பாண்டியனின் உதவியாளர் ரவி இயக்கும் படத்தில் பரத்துடன் காமெடி பண்ண காத்திருக்கிறேன். 
இப்படம் முழுக்க முழுக்க காமெடி சப்ஜெக்ட் படம். நான் நிறைய புதுமுக இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறேன். காதலும், காமெடியும் கலந்து ரொம்ப என்ஜாய் பண்ணி நடிக்கிறேன். எனக்கு காதலும் பிடிக்கும், காமெடியும் பிடிக்கும், இன்னும் வித்தியாசமான கதைகள் அமைந்தால் அதிலும் நான் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.

No comments :

Post a Comment