மலைவாழ் பெண்ணாக மனிஷா யாதவ்!
திருப்பதி பிரதர்ஸ் சார்பில், லிங்குசாமி தயாரிக்க, 'தென்மேற்கு பருவகாற்று', 'நீர்பறவை' படங்களை இயக்கிய இயக்குனர் சீனுராமசாமி அடுத்து இயக்க உள்ள படம் 'இடம் பொருள் ஏவல்'. விஜய் சேதுபதி, வழக்கு எண் மனிஷா நடிக்க உள்ளனர். படம் பற்றி இயக்குனர் சொல்லும் போது, இடம் பொருள் தேடி ஏவி விடப்பட்ட மனிதர்களை பற்றிய படம் இந்த படம். கொடைக்கானலில் மார்ச் 3ம் தேதி படப்பிடிப்பு துவங்க உள்ளது.
இதுவரை நகரத்து பெண்ணாக நடித்திருந்த மனிஷா, முதன்முறையாக இந்த படத்தில் மலைவாழ் விவசாய பெண்ணாக வருகிறார். அவரை வைத்து டெஸ்ட் ஷூட் செய்து இந்த ரோலுக்கு பொருத்தமாக இருக்கவே அவரை ஒப்பந்தம் செய்தோம் என்கிறார் இயக்குனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment