குடிநீர் பிரச்னையை கையிலெடுக்கும் விக்ரம் சுகுமாறன்
பெரும் வெற்றியும், பாராட்டும் பெற்ற மதயானை கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரம் சுகுமாறன், தன் முதல் படத்தில் ஊரையும், உறவையும், செய்முறைகளையும் சிந்தாமல் சிதறாமல் அழகாக காட்டி பலரின் பாராட்டையும் பெற்றவர், தற்போது அடுத்த படத்திற்கான கதை வேலையை முடித்துவிட்டார். அனேகமாக இவர் அடுத்து இயக்க போகும் கதை குடிநீர் பிரச்னையை மையமாக கொண்டிருக்குமாம்.
இந்த கதைக்கு ஆர்யா, விஜய்சேதுபதி, விக்ரம பிரபு போன்றோர் நடித்தால் நன்றாக இருக்கும் என ஆசைபடுகிறார், அதிர்ஷ்டம் யார் பக்கம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment