குளறுபடி செய்யும் ‘மான் கராத்தே’
ரசிகர்களை குழப்பி வருகிறது சிவகார்த்திகேயனின் ‘மான் கராத்தே’.
சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிப்பில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ‘மான் கராத்தே’ படத்தின் பாடல்கள் முதலில் மார்ச் 1ம் திகதி வெளியாகவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பின்னர் பாடல்களை மெருகேற்றும் பணிக்கு இன்னும் நேரம் தேவைப்படுவதால் படத்தின் ஆடியோ வெளியீட்டை வரும் மார்ச் 16ம் திகதிக்கு தள்ளி வைத்திருப்பதாக அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதே செய்தியை ஆடியோ உரிமையைப் பெற்றிருக்கும் சோனி நிறுவனமும் உறுதி செய்தது.
பின்னர் மார்ச் 1ம் திகதி ‘சிங்கிள் டிராக்’ வெளியிடப்படும் என்று சோனி நிறுவனம் அறிவித்தது.
ஆனால் இன்றைய நாளிதழ்களில் வெளிவந்திருக்கும் ‘மான் கராத்தே’ விளம்பரத்தில் ‘அனிருத் இசை நாளைமுதல்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்த விளம்பரத்தைப் பார்த்த ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment