‘எந்திரன் இந்தியன்’ 2ம் பாகம்
எந்திரன், இந்தியன் படத்தின் 2ம் பாகத்தை இயக்கவிருக்கிறார் ஷங்கர்.
ரஜினி, கமலுக்கு எந்திரன், இந்தியன் படங்கள் மெகா ஹட் படங்களாக அமைந்தன. இருவருமே இப்படங்களில் இரட்டை வேடங்களில் நடித்து இருந்தனர்.
இப்படங்களை இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். தற்போது, விக்ரமை வைத்து ‘ஐ’ படத்தை இயக்கி வருகிறார்.
இது முடிந்ததும் இந்தியன், எந்திரன் படங்களின் 2–ம் பாகத்துக்கான பட வேலைகளை முழு வீச்சில் துவங்குகிறார்.
கோச்சடையான் படத்தை முடித்து விட்டு ரஜினி ஓய்வில் இருக்கிறார்.
அடுத்த படத்துக்கான கதையை அவர் இன்னும் முடிவு செய்யவில்லை. கமல், விஸ்வரூபம் 2 படத்தை முடித்துள்ளார்.
அடுத்து உத்தமவில்லன் படத்தில் நடிக்க தயாராகிறார். மலையாளத்தில் ஹிட்டான ‘திரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
கமல் பிசியாக நடித்துக் கொண்டு இருப்பதால் ரஜினியை வைத்து எந்திரன் 2 படங்களை முதலில் துவங்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment