சென்னையில் 24 முதல் ஸ்வீடன் திரைப்பட விழா
சென்னையில் பிப்ரவரி 24 முதல் 27-ஆம் தேதி வரை ஸ்வீடன் நாட்டு திரைப்பட விழா நடைபெறுகிறது.
இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் மற்றும் புதுதில்லியில் உள்ள ஸ்வீடன் நாட்டுத் தூதரகம் ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன. சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் நடைபெறும் இந்த விழாவில் மொத்தம் 9 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.
இதன் தொடக்க விழா பிப்ரவரி 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்தியாவுக்கான ஸ்வீடன் தூதர் ஹரால்டு சாண்ட்பர்க், தமிழகத்தின் செய்தித் துறைச் செயலாளர் எம்.ராஜாராம், சென்னையிலுள்ள ஸ்வீடன் துணைத் தூதர் அருண் வாசு, நடிகை பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கிறார்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment