தீபிகா வேண்டவே வேண்டாம்: சல்மான் கான்
தீபிகா படுகோனே என் படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் சல்மான் கான்.
அடுத்தடுத்து ஹிட் படங்கள் கொடுத்து பாலிவுட்டின் நம்பர் ஒன் நாயகியாக இருப்பவர் தீபிகா படுகோனே.
இவர் தற்போது ஷாருக்கானுடன் சேர்ந்து ஹேப்பி நியூ இயர் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவரை தன்னுடைய படத்தில் நாயகியாக்க வேண்டாம் என்று சல்மான் கான் கூறியுள்ளார்.
சூரஞ் பர்ஜாத்யாவின் படத்தில் சல்மான் கான் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஏற்ற ஜோடியை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
சல்மானுக்கு ஜோடியாக முன்னணி நடிகையான தீபிகா படுகோனேவை நடிக்க வைக்கலாம் என்று நினைத்து ஹீரோவிடம் அது குறித்து தெரிவித்துள்ளனர்.
தீபிகா மிகவும் பிசியான நாயகி.
என் படத்திற்கு பிசியாக இருக்கும் நடிகை வேண்டாம் என்று தெரிவித்துவிட்டாராம் சல்மான்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment